அட்டாளைச்சேனையில் கல்வி மேம்பாட்டுக்கான உதவிகள் வழங்கி வைப்பு

பின்தங்கிய பிரதேச பாடசாலைகளில் ஒன்றான அம்பாறை மாவட்ட அட்டாளைச்சேனை கல்விக் கோட்டத்திற்குட்பட்ட ஆலங்குளம் றகுமானியா வித்தியாலயத்தின், கல்வி பொதுத் தராதர சாதாரண தர மாணவர்களுக்கு, அட்டாளைச்சேனை ஒலன்ஸ் 93 நண்பர்கள் ஒன்றியத்தினால் முக்கிய பாடங்களுக்கான கடந்த கால பரீட்சை வினாவிடை புத்தகப் பொதிகள் இன்று வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

பாடசாலை அதிபர் எம்.ஏ.சி.எம்.உபைதுல்லா தலைமையில் பாடசாலையில் நடைபெற்ற இந்நிகழ்வில், அமைப்பின் தலைவரும் அனர்த்த முகாமத்துவ மத்திய நிலையத்தின் அம்பாறை மாவட்ட உதவிப் பணிப்பாளர் எம்.ஏ.சி.எம்.றியாஸ் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.

இந்நிகழ்வில், அக்கரைப்பற்று வலயக் கல்வி அலுவலகத்தின் உதவிக் கல்விப்பணிப்பாளர்களான எஸ்.அம்ஜத்காண், ஏ.எம்.நௌபர்டீன், ஒன்றியத்தின் நிர்வாக உறுப்பினர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!