சட்டவிரோதமாக நாட்டுக்குள் நுழைபவர்களால் கொரோனா அபாயம்!

இந்தியாவிலிருந்து படகுகள் மூலம் இலங்கைக்குள் சட்டவிரோதமாக நுழைபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ள தொற்று நோய்ப்பிரிவின் பிரதம அதிகாரி சுடத் சமரவீர, இதனால் கொரோனா வைரஸ் பரவும் ஆபத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை கடற்படையினர் கடும் ரோந்து கண்கானிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள போதிலும், இந்தியாவிலிருந்து இலங்கைக்கு நுழைபவர்களின் எண்ணிக்கையும், ஆபத்தும் அதிகமாக உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு இலங்கைக்குள் நுழைபவர்களின் ஒருவராவது கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டிருந்தாலும் அதனால் கொரோனாத் தொற்று பரவும் அபாயம் உள்ளதாக கூட்டிக்காட்டியுள்ளார்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!