இரத்மலானை பகுதியில் அடகு நிலையத்தில் கொள்ளை

இரத்மலானை – பெலெக்கெட சந்தியில் உள்ள தங்க ஆபரணங்களை அடகு வைக்கும் நிறுவனம் ஒன்றில் கொள்ளை சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த நிறுவனத்தில் இரண்டு கோடி ரூபாய்க்கும அதிக பெறுமதி கொண்ட தங்க ஆபரணங்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டு மாடிக்கட்டிடத்தின் இரண்டாவது மாடியில் உள்ள தங்க ஆபரண அடகு வைக்கும் நிறுவனத்தில் நேற்றைய தினம் கொள்ளை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பணியாளர்களால் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!