யாழ்.நெல்லியடியில் முச்சக்கர வண்டிகளின் தரம் தொடர்பில் தீடீர் ஆய்வு!

யாழ்ப்பாணம் வடமராட்சி நெல்லியடி நகரல் சேவையில் ஈடுபடும் முச்சக்கர வண்டிகளை பரிசோதனை செய்யும் நடவடிக்கை  பிரதேச சபையினரால் நேற்று முன்னெடுக்கப்பட்டது.

நெல்லியடி நகர பகுதியில் சேவையில் ஈடுபடும் சில முச்சக்கரவண்டிகள், பராமரிப்பு இன்மை, அதிக புகை, அதிக ஒலி, பொருத்தமற்ற இருக்கைகள், அதிகளவு அதிர்வுடன் கூடிய இயந்திர பாவணை போன்ற பல்வேறு அசௌகரியங்களுடன் சேவையில் ஈடுபடுவதாக பிரதேசசபையினரிடம் முறையிடப்பட்டது.

முறைப்பாட்டை அடுத்து கரவெட்டி பிரதேசசபை தவிசாளர் த.ஐங்கரன் தலைமையில், நெல்லியடி பொலிஸாருடன் இணைந்து முச்சக்கர வண்டிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

நெல்லியடி நகரப்பகுதியில் சேவையில் ஈடுபடும் 30 முச்சக்கரவண்டிகளில், 12முச்சக்கர வண்டிகள் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டு தகுதியான முச்சக்கர வண்டிகளுக்கு தகுதிச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

குறைபாடுள்ள முச்சக்கரவண்டிகளுக்கு காலஅவகாசம் வழங்கப்பட்டு, பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர், சேiயில் ஈடுபடுத்த அறிவுறுத்தப்பட்டது.

கரவெட்டி பிரதேச சபை தவிசாளரின் முன்மாதிரியான செயற்பாட்டிற்கு பயணிகள் தமது பாராட்;டைத் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!