19 ஆவது திருத்தத்தில் உள்ள சாதகமான விடயங்கள் நீக்கப்படாது

அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தத்தில் உள்ள சாதகமான விடயங்கள் நீக்கப்படாத அதேவேளை, நாட்டிற்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய அம்சங்களை அரசாங்கம் நீக்கும் என்று அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

19 ஆவது திருத்தத்தை நீக்கும் குறுகிய கால நடவடிக்கைகக்கும் புதிய அரசமைப்பை உருவாக்கும் நீண்ட கால நடவடிக்கைக்கும் தாம் மக்களின் ஆணையை கோரியதாக குறிப்பிட்டுள்ளார்.

மக்களால் வழங்கப்பட்ட ஆணைக்கு ஏற்ப தாங்கள் செயற்படுவோம் என்று அமைச்சர் கூறினார்.

இதேவேளை, 20 ஆவது திருத்தத்திற்கான நகல்வடிவை தயாரிப்பதற்கான கால எல்லை எதுவும் வழங்கப்படவில்லை என்றும், ஆனால் நகல்வடிவம் விரைவில் வெளியாகும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

நிச்சயமாக புதிய அரசமைப்பு கொண்டுவரப்படும் என்றும், அதற்கு சிறிது காலம் தேவைப்படும் என்றும் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!