யாழ்.பல்கலைக்கழக பாதுகாப்பு உத்தியோகத்தர்களால் கவனயீர்ப்பு போராட்டம்

யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தில் கடமையாற்றும், பாதுகாப்பு உத்தியோகத்தர்கள், பல்கலைக்கழக ஊழியர் சங்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர்.

கொரோனா பொது முடக்க காலத்தில், யாழ்.பல்கலைக் கழகத்தில் திருட்டுச் சம்பங்கள் இடம்பெற்றதாகவும், அதற்கு பாதுகாப்பு உத்தியோகத்தர்களும் உடந்தை என ஊழியர் சங்கம் வெளியிட்ட கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தே போராட்டத்தை முன்னெடுத்தனர்.

திருட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றமை தொடர்பில் தகவல்கள் எவையும் தெரிந்தால் அவற்றை வெளிப்படுத்தி, சம்பவத்தை நிருபிக்குமாறும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

எனினும், பல்கலைக் கழக பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!