தொண்டமானின் மகள் தேர்தலில் களமிறங்குகின்றாரா?

மாகாணசபைத் தேர்தலில் அமரர் ஆறுமுகன் தொண்டமானின் மகளான விஜயலட்சுமி தொண்டமான் போட்டியிடவுள்ளதாக வெளியாகியுள்ள தகவல்களை இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் நிராகரித்துள்ளது.

இலங்கையில் அடுத்து நடைபெறவுள்ள மாகாணசபைத் தேர்தலில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் சார்பில் அமரர் ஆறுமுகன் தொண்டமானின் மகள் விஜயலட்சுமி, மத்திய மாகாணத்தில் போட்டியிடவுள்ளார் செய்திகள் வெளியாகியிருந்தன.
இந்த செய்தியை மறுத்து, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்…

‘விஜயலட்சுமி தொண்டமானின் அரசியல் பயணம் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல் உண்மைக்கு புறம்பானதாகும்.
தொழிலாளர் காங்கிரஸிற்குள் குழப்பத்தை ஏற்படுத்தி அரசியல் இலாபம் தேடும் நோக்கிலேயே இவ்வாறு திட்டமிட்ட அடிப்படையில் போலி தகவல் பரப்பட்டுள்ளது. இதனை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

மாகாணசபைத் தேர்தலுக்கான அறிவித்தல் இன்னும் வெளியாகிவில்லை.

அது தொடர்பில் தொழிலாளர் காங்கிரஸ் எந்தவொரு கலந்துரையாடலிலும் ஈடுபடவில்லை.

னவே, போலியான தகவல்களை நம்பவேண்டாம் என மக்களிடம் கேட்டுக்கொள்கின்றோம்.

உரிய நேரத்தில் – உரிய முடிவுகளை எடுத்து – உரிய வகையில் மக்களுக்கு அறிவிக்கும் அரசியல் இயக்கமே இலங்கை தொழிலாளர் காங்கிரஸாகும்.’ என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!