கண்ணாடி போத்தல்களுக்கு பதிலாக களி மண் குவளைகள் – அரசு தீர்மானம்

நாட்டில் குடிநீர் சேமித்து வைக்கும் கண்ணாடி போத்தல்களை பயன்பாட்டில் இருந்து நீக்கி அதற்குப் பதிலாகக் களி மண் குவளைகளைப் பயன்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அலுவலகங்கள், வாகனங்கள் மற்றும் வீடுகளில் குடிநீர் சேமித்து வைக்கும் கண்ணாடி போத்தல்களை நீக்கிவிட்டு அதற்குப் பதிலாகக் களி மண் குவளைகளை அறிமுகப்படுத்துவதற்கும் அரசு திட்டமிட்டுள்ளது.

இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீரவுக்கும், புகையிலை மற்றும் மதுசாரம் தொடர்பான தேசிய ஆணையத்திற்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

கண்ணாடி போத்தல்களைப் பயன்படுத்துவதனால் பல்வேறு சுகாதார பிரச்சினைகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளதாக ஆணையத்தின் தலைவர் வைத்தியர் சமாதி ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

புதிய சுவையுடன் நீரைக் குடிக்கக் கூடிய வகையில் களி மண்ணால் போத்தல்களை உருவாக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!