செல்வச்சந்நிதி முருகன் ஆலய மஹோற்சவம்

வரலாற்றுச் சிறப்புமிக்க தொண்டமனாறு செல்வச் சந்நிதி ஆலய மஹோற்சவம், சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றி சிறப்பாக இடம்பெற்றுவரும் நிலையில், செப்டெம்பர் மாதம் முதலாம் திகதி தேர்த்திருவிழா இடம்பெறவுள்ளது.

ஆலயத்துக்கு வருகைதரும் அடியவர்கள், சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றி, சமூக இடைவெளியை பேணுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

கொரோனாத் தொற்றிலிருந்து அடியவர்களை பாதுகாக்கும் வகையில், இக் கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்படும் நிலையில், வடமராட்சி வடக்கு பருத்தித்துறை பிரதேச செயலகம் உற்சவகாலத்தில் கடைப்பிடிக்க வேண்டிய சுகாதார வழிகாட்டுதல்கள் தொடர்பில் தெளிவுபடுத்தியுள்ளது.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!