பாடகர் எஸ்.பி.பி குணமடைய வேண்டி கொழும்பில் விசேட பிராத்தனை

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள தென்னிந்தியாவின் பிரபல முன்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மற்றும் எமது நாட்டின் மெல்லிசை பாடகர் சகாயம் பர்னாந்து ஆகியோர் விரைவில் நலமடைய வேண்டி, கொழும்பில் விசேட பிராத்தனை ஒன்று இடம்பெற்றுள்ளது.

இலங்கை தமிழ் இசைக்கலைஞர் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த விசேட பூஜை, கொழும்பு ஜிந்துப்பிட்டி ஸ்ரீ சிவசுப்ரமணிய ஆலயத்தில் இடம்பெற்றது. இந்த வழிபாட்டில் கலைஞர்கள் பலர் பங்கேற்றிருந்தனர்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!