எம்.பிக்களுக்கு விசேட செயலமர்வு

நாடாளுமன்ற செயற்பாடுகளை தெளிவுபடுத்துவதற்காக 9 ஆவது நாடாளுமன்றத்திற்கு தெரிவான நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான இரண்டு நாள் செயல் அமர்வு இன்று ஆரம்பமாகியுள்ளது.

நாடாளுமன்றத்தின் முதலாம் குழு அறையில் இந்த செயலமர்வு இடம்பெறுகின்றது.

இன்று மற்றும் நாளை என இருநாள் செயலமர்வாக, காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை இந்த செயலமர்வு இடம்பெறும் என நாடாளுமன்றத்தின் பிரதி பொதுச் செயலாளர் நீல் இத்தவெல தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தின் கட்டளை சட்டம், சம்பிரதாயங்கள் மற்றும் குழு நடவடிக்கைகள் இடம்பெறும் விதம் தொடர்பில் இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தெளிவுப்படுத்தப்படவுள்ளது.

சாபநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இடம்பெறும் இந்த செயலமர்வில் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ, எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, நாடாளுமன்ற பொதுச் செயலாளர் தம்மிக தசநாயக்க மற்றும் பிரதி பொதுச் செயலாளர் உள்ளிட்ட பல அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!