பிலிப்பைன்ஸ் இரட்டைக் குண்டுவெடிப்பு : உயிழப்பு 14 ஆக உயர்வு!

தெற்கு பிலிப்பைன்ஸ் நகரமான ஜோலோவில் பெண் தற்கொலை குண்டுதாரி நடத்தியதாக கூறப்படும் இரட்டை குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது.

குறித்த குண்டு வெடிப்புக்களில் 75 பேர் காயமடைந்துள்ளனர் என்றும் அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது. முதல் குண்டுவெடிப்பு மணிலாவிற்கு தெற்கே ஆயிரம் கிலோமீட்டர் தொலைவில் சுலு மாகாணத்தின் ஜோலோ நகரில் உள்ள வணிக கட்டடத்தின் முன் நிறுத்தப்பட்டிருந்த இராணுவ வாகனத்தை குறிவைத்து நிகழ்த்தப்பட்டுள்ளது.

அதனைத்தொடர்ந்து கத்தோலிக்க தேவாலயத்தை குறிவைத்து மற்றொரு குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட்டுள்ளது.

இந்த வெடிப்பில் உணவு மற்றும் கணினி கடை மற்றும் இரண்டு இராணுவ லொரிகள் சேதமடைந்ததாக அந்நாட்டு இராணுவ செய்தித் தொடர்பாளர் மற்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

எனினும், இந்த குண்டுத் தாக்குதலுக்கு, எந்தவொரு குழுவும் இதுவரை பொறுப்பேற்கவில்லை. இதேவேளை பிலிப்பைன்ஸில், மிகவும் வன்முறையான பயங்கரவாத அமைப்புகளில் ஒன்றான, அபு சயாஃப் குழுவின் கோட்டையாக,
ஜோலோ நகர் விளங்குவதாக, அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!