சோமாலியாவைப் போன்ற நிலைமை தடுப்பு : கமால் குணரத்ன

சோமாலியாவைப் போன்ற ஒரு நிலைமை நாட்டில் ஏற்படாமல் தடுக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமால் குணரத்ன தெரிவித்துள்ளார்.

அரச புலனாய்வுப் பிரிவு, இராணுவம், பொலிஸ் புலனாய்வுப்பிரிவு, விஷேட அதிரடிப்படை என்பவற்றுடன் சிறைச்சாலையையும் ஒன்றிணைத்து நுட்பமாக செயற்பட்டமையால் அது தடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

நாட்டில் பெரிய சிறைச்சாலையாகக் கருதப்படும் வெலிக்கடை சிறைச்சாலை மற்றும் மெகசின் சிறைச்சாலை, ரிமான்ட் சிறைச்சாலை உள்ளிட்டவற்றில் தினமும் கைதொலைபேசிகளும் போதைப் பொருள் பொட்டலங்களும் சிம் அட்டைகளும் கைப்பற்றப்படுகின்ற பின்னணியிலேயே பொலிஸ் அதிரடிப்படையினர் களமிறக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

பாதாள உலக செயற்பாடுகள்;, போதைப் பொருள் பாவனை மற்றும் திட்டமிட்ட குற்றச் செயல்கள் போன்றவற்றை முற்றாக ஒழிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

இலங்கை இதற்கு முன்னர் சென்ற போக்கிலேயே எதிர்வரும் 4 முதல் 5 வருடங்களும் பயணித்திருக்குமாயின் யாருக்கும் வீதியில் சுதந்திரமாக செல்லக் கூடிய சூழல் இருந்திருக்காது என்றும் கமால் குணரத்ன சுட்டிக்காட்டினார்.

எனவே சோமாலியாவைப் போன்ற ஒரு நாடக மாறவிருந்த சந்தர்ப்பத்தில் முறையான வேலைத்திட்டங்களை முன்னெடுத்தன் மூலம் அவ்வாறானதொரு நிலைமை ஏற்படாமல் தடுத்திருக்கின்றோம் என தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!