முல்லைத்தீவில் வைத்தியர் பற்றாக்குறை – மருத்துவமனை நிர்வாகம் தெரிவிப்பு

முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் நிலவும் வைத்தியர் பற்றாக்குறை நிவர்த்தி செய்யப்படவில்லை என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

வைத்தியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யகோரி சுகாதார அமைச்சிற்கு தெரியப்படுத்திய நிலையில் கடந்த 19ஆம் திகதி சுகாதார அமைச்சினால் யாழ்போதனா வைத்தியசாலை பணிப்பாளருக்கு வைத்தியர்களை உடனடியாக முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பிவைக்குமாறு கடிதம் அனுப்பிவைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இதுவரை வைத்தியர்களை அனுப்பவில்லை என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கரைதுறைப்பற்று பிரதேச சபையின் உறுப்பினர் த.அமலன் சுகாதார அமைச்சினால் அனுப்பிவைக்கப்பட்டுள்ள இந்த அறிவித்தல் கடிதங்களை மாவட்ட மருத்துவமனையின் நிர்வாகத்திடம் தகவல் அறியும் சட்டம் ஊடாக கேட்டுப்பெற்றுள்ளதுடன், யாழ் போதனா வைத்தியசாலையின் அசமந்த போக்கு தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறையிடவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!