கூட்டமைப்பு, கேட்பது வேடிக்கையான விடயம் – சாகர!

கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில், மாகாண சபைத் தேர்தலை ஒத்திவைக்க, ஆதரவு வழங்கிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இன்று மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு கோருவது, வேடிக்கையான விடயம் என, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.’

இன்று, கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு குறிப்பிட்டார்.

உலகளாவிய ரீதியில், கொவிட்-19 கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மரணித்தவர்களின் எண்ணிக்கை, அமெரிக்கா, பிரேஸில், இந்தியா போன்ற நாடுகளில், மிக உயர்வாகக் காணப்படுகின்றன.

ஆனால் எமது நாட்டைப் பொறுத்தவரை, இந்த நெருக்கடி நிலையை அரசாங்கம் சிறப்பாகக் கையாண்டதன் ஊடாக, தொற்றுப்பரவலைக் கட்டுப்படுத்த முடிந்திருக்கிறது.

பொதுத்தேர்தலை நடத்துவதால், கொரோனா வைரஸ் வெகுவாகப் பரவும் என்று, கடந்த காலத்தில் பலரும் பிரசாரங்களை முன்னெடுத்து வந்தனர்.

எனினும் தேர்தல் முடிவடைந்து இருவார காலமாகியும், தற்போது வரையில் தேர்தல் நடவடிக்கைகளால், கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியிருப்பதாக, எந்தவொரு நோயாளியும் பதிவாகவில்லை.

இந்நிலையில், மறுபுறம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகரைச் சந்தித்து, மாகாண சபைத் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறது.

மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவது, கடந்த அரசாங்கத்தினால் எவ்வாறு காலந்தாழ்த்தப்பட்டது என்பதை, நினைவுபடுத்திப் பார்க்க வேண்டும்.

அவற்றைப் பிற்போடுவதற்கு ஏதுவான வகையில், கடந்த நல்லாட்சி அரசாங்கத்தினால், நாடாளுமன்றத்தில் தீர்மானமொன்று கொண்டுவரப்பட்டது.

இதனை நடைமுறைப்படுத்துவதற்கு, மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகள் அவசியம் என்று, சட்டமாதிபர் தெரிவித்ததை அடுத்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, அதற்கு ஆதரவாக வாக்களித்து, மாகாண சபைத் தேர்தல்களைப் பிற்போடக்கூடிய வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுத்தது.

அவ்வாறான நிலையில், இப்போது இந்திய உயர்ஸ்தானிகரைச் சந்தித்து, மாகாண சபைத் தேர்தலை நடத்தவேண்டும் என்று கோருவது வேடிக்கையாக இருக்கின்றது. என குறிப்பிட்டுள்ளார்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!