கொழும்பு நகரை, மீண்டும் அழகுபடுத்துவோம் : நாளக!

மீண்டும், கொழும்பு நகரை அழகுபடுத்தும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படும் எனவும், நகர அபிவிருத்தி அதிகார சபையின் ஊடாக, அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும் எனவும், இராஜாங்க அமைச்சர் நாளக கொடவௌ தெரிவித்துள்ளார்.

இன்று, கொழும்பு மிதக்கும் சந்தையை நவீனமயப்படுத்தும் வேலைத் திட்டத்தை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில், இவ்வாறு குறிப்பிட்டார்.

ஜனாபாதிக்கு நாட்டை அபிவிருத்தி செய்வது தொடர்பில் நீண்ட எதிர்பார்ப்புகள் உள்ளன.

அதை அவர் கடந்த காலங்களில் நடைமுறைப்படுத்தியிருந்தார்.

யுத்தம் நிறைவடைந்த பின்னர் அப்போதைய பாதுகாப்பு செயலாளராக இருந்த கோட்டபாய ராஜபக்ஸவிற்கு கொழும்பு நகர அபிவிருத்தி திட்டம் வழங்கப்பட்டது.

அதன் விளைவாக இந்த நகரம் அழகுபடுத்தப்பட்டது.

அது ஒரு பாரியமாற்றத்தை ஏற்படுத்தியது.

2014 ஆம் ஆண்டு, எங்களுக்கு ஆசிய கண்டத்தில் மிக விரைவாக அபிவிருத்தி அடைந்து வரும் நகரம் என்ற விருது கிடைத்தது.

சீனா நாட்டை பின்னுக்கு தள்ளி, நாம் முன்னோக்கி சென்றதாகும்.

அதன் பின்னர் நிலைமை தலைகீழாக மாறியது.

இன்று ஜனாபதியின் எதிர்பார்ப்பு, மீண்டும் நிறைவேறவுள்ளது.

என்னுடைய அமைச்சின் கீழ் பல நகர அபிவிருத்தி வேலை திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளதாதற்கான சிறந்த அணி என்னிடம் உள்ளது.

அவர்கள் இன்று எனக்கு உதவியாக உள்ளனர்.

கடந்த காலங்களில் நிறுத்தப்பட்ட அனைத்து திட்டங்களும் மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும்.

நாம் அபிவிருத்திகலை ஆரம்பிக்கும் முதல் கட்டம்தான், இந்த மிதக்கும் சந்தை அபிவிருத்திதிட்டம் ஆகும்.

ஜனாபதியின் பொருளாதார கொள்கையில் இதும் ஒன்று.

அவருடைய பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டது.

எங்களுடைய அபிவிருத்தி பணிகளை ஆரம்பிக்கும் போது பலருக்கு சிக்கல் ஏற்படும்.

வர்த்தக்ரக்ளுக்கன் தீர்வுகளை நாம் பெற்றுக்கொடுக்க தயராக உள்ளோம்.

யாருக்கு என்ன பிரச்சினை வநதலும் அவற்றுக்கான தீர்வுக்கு தயாராக உள்ளோம்.

ஜனாதிபதி என்னை இந்த அபிவிருத்தி பணிகளுக்கு நியமித்திருப்பது பாரிய எதிர்பார்ப்பார்ப்புக்களுடன். என குறிப்பிட்டுள்ளார்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!