நாட்டில், மருந்துப் பற்றாக்குறை நிலவவில்லை : வெல்லன!

நாட்டில், 5 வீத மருந்துப் பற்றாக்குறை நிலவும் நிலையில், அதனை வைத்துக்கொண்டு, நாட்டில் மருந்துப் பற்றாக்குறை நிலவுகின்றது எனக் கூற முடியாது என, அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சம்மேளனத்தின் தலைவர் ருக்ஸன் வெல்லன தெரிவித்துள்ளார்.

இன்று, கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு குறிப்பிட்டார்.

அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் வைத்தியர் பாதெனிய , அழுத்கே , நவீன் சொய்சா உள்ளிட்ட தரப்பினர், கடந்த 2018 ஆம் ஆண்டு வரை ராஜித சேனாரத்னவின் வீட்டிற்கு சென்று, அவருடன் ஒன்றாக மது அருந்தி, அவரே சிறந்த சுகாதார அமைச்சர் என்ற கருத்துடன், இணைந்து செயற்பட்டனர்.

அதற்கு சிறந்த ஆதாரமே இந்த புகைப்படமாகும்;.

அப்பொழுது மருந்து பற்றாக்குறை எதுவும் நிலவவில்லை.

மாறாக இப்பொழுதே நிலவுகின்றது.

மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினரால் அத்துப்பூச்சியை முதலையாக்கவும் முடியும்.

முதலையை அத்துப்பூச்சியாக்கவும் முடியும்.

ஆனாலும் நாட்டு மக்கள் முட்டாள்கள் இல்லை என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டியது அவசியமானதாகும்.

மாறாக நாட்டில் சிறந்த அறிவு படைத்த மக்களே வாழ்ந்து வருகின்றனர்.

ஆகவே, அவர்களுடைய செயல்கள் தொடர்பில் நாட்டு மக்கள் நன்கு அறிவர்.

சனத் ஜெயசூரியவிற்கும் எதிர்காலத்தில் இத்தகைய நிலைமையே ஏற்படும்.

நாட்டில் உள்ள மருந்து விநியோக முறைமைக்குள் எப்பொழுதும் 5 வீத மருந்து பற்றாக்குறை கண்டுபிடிக்கப்படும்.

இன்றும் எங்கேனும் கண்டறியப்பட்டிருக்கும்.

நாம் பின்பற்றும் மருந்து விநியோக முறைமையின் ஊடாகவே, உடனடியாக மருந்து பற்றாக்குறையை கண்டறிக்கூடியதாக இருக்கின்றது.
அமெரிக்காவிலும் 5 வீத மருந்து தட்டுப்பாடு நிலவக்கூடும்.

அவர்களும் பின்பற்றும் முறைமையின் ஊடாக உடனடியாக மருந்து தட்டுப்பாட்டை கண்டறிகின்றனர்.

அவ்வாறே எமது நாட்டிலும் சிறந்த முறைமை காணப்படுகின்றது.

இந்த 5 வீத தட்டுப்பாட்டை முன்னிலைப்படுத்தியே, மருத்துவ அதிகாரிகள் சங்கம், நாட்டில் பாரிய மருந்து தட்டுப்பாடு நிலவுகவாக கூறிக்கொள்கின்றனர். என குறிப்பிட்டுள்ளார்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!