ஜனாதிபதியின் கொள்கைப்பிரகடனம், கேக்கிற்கு சாயம் பூசுவது போன்ற செயற்பாடு : திஸ்ஸ!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் வெளியிடப்பட்ட கொள்கை பிரகடமானது, கேக் ஒன்றிற்கு சாயம் பூசுவது போன்ற செயற்பாடு என, ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

இன்று, கொழும்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு குறிப்பிட்டார்.

கடந்த வாரம் ஜனாதிபதியினால் அரசாங்கத்தின் கொள்கை திட்ட அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டது,

ஆனால் பொதுவாக, கொள்கை அறிக்கையைத் திட்டமிடுவதற்கான அடிப்படைகளை, நான் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவின் கொள்கை திட்ட அறிக்கையில் காணவில்லை.

நான் ஏன் இவ்வாறு குறிப்பிடுகிறேன் என்றால், பிரதானமாக ஒரு கொள்கை திட்டம் வெளியிடப்படும் போது குறித்த காலப்பகுதியில் இருக்கும் மக்களின் பிரதான பிரச்சனைகளை குறித்து அவற்றுக்கு மேற்கொள்ள முடியுமான தீர்மானங்கள் மற்றும் தமது எதிர்கால செயற்பாடுகளே, ஒரு கொள்கை திட்ட அறிக்கையில் வெளியிடப்படும்.

ஆனாலும் எதிர்பாராத விதமாக அவர் வெளியிட்ட கொள்கை திட்ட அறிக்கை, கேக் ஒன்றிற்கு சாயம் பூசி மறைப்பது போன்றிருந்தது.

காரணம் ஜனாதிபதியினால் வெளியிடப்பட்ட கொள்கை திட்டத்தில், குறுகிய, நீண்ட, அல்லது மத்திய காலப்பகுதியில், தற்போதைய சவால்களை வெற்றி கொள்வதற்கான முறைகள் எதுவுமே உள்ளடக்கப்படவில்லை.

இவற்றிற்கு சிறந்த உதாரணம் தான், இன்று எமது நாடு எதிர்நோக்கியுள்ள பிரதான பிரச்சனை கொரோனா வைரஸினால் மக்களின் வாழ்க்கை தரமும், நாட்டின் பொருளாதாரமும் வீழ்ச்சி அடைந்துள்ளமையாகும்.

கொரோனா வைரசிலிருந்து நாட்டை மீட்டெடுக்க உரிய நடைமுறைகளை முன்னெடுக்க வேண்டியது அவசியமாகும், இருப்பினும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் கொள்கை பிரகடனத்தில் இது தொடர்ட்பில் ஏதுவும் சுட்டிக்காட்டப்படவில்லை. என குறிப்பிட்டுள்ளார்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!