நுவரெலியா, பொகவந்தலாவயில் விபத்து!

நுவரெலியா மாவட்டம் பொகவந்தலாவயில் மாணவி ஒருவர் முச்சக்கரவண்டி ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானார்.

பொகவந்தலாவ பகுதியில் மேலதிக வகுப்பிற்கு சென்ற மாணவி முச்சக்கரவண்டி ஒன்றில் மோதுண்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் இன்றைய தினம் முற்பகல் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொட்டியாகலை பகுதியில் இருந்து பொகவந்தலாவ நகரபகுதிக்கு சென்ற முச்சக்கர வண்டியில் குறித்த சிறுமி மோதுண்டார்.

குறித்த சம்பவம் பொகவந்தலாவ நகரில் பொருத்தப்பட்டிருந்த சீ.சீ.டிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

சம்பவத்தில் பலத்த காயங்கள் எதுவும் குறித்த சிறுமிக்கு ஏற்பவில்லையெனவும் முச்சக்கர வண்டி சென்று கொண்டிருந்த போது குறித்த சிறுமி வீதியை கடக்க முற்பட்ட போதே முச்சக்கர வண்டியில் மோதுண்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!