மட்டு, செங்கலடி பகுதியில் கோஷ்டி மோதல்: சிறுவன் வெட்டிக் கொலை!

மட்டக்களப்பு மாவட்ட செங்கலடி பிரதேசத்தில் கோஷ்டி மோதல் காரணமாக இடம்பெற்ற வாள் வெட்டுச் சம்பவத்தில் 15 வயதுச் சிறுவன் பலியானதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று இரவு 08.30 மணியளவில் செங்கலடி கொம்மாதுறை விநாயகர் வீதியை அண்டியுள்ள வீடொன்றில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் செங்கலடி சந்தை வீதியைச் சேர்ந்த 15 வயதுடைய ரமணன் திவிராஜ் என்ற மாணவனே வெட்டிக் கொல்லப்பட்டுள்ளார்.

சடலம் பிரேத பரிசோதனைக்காக ஏறாவூர் ஆதார வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

சிறு வாய்த்தர்க்கமாக ஆரம்பித்த விடயம் கோஷ்டி மோதலாக மாறியதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவ இடத்திற்கும் மற்றும் வைத்தியசாலை உள்ள சடலத்தை பார்வையிட ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற பதில் நீதவான் வீ.தியாகேஸ்வரன் வருகை தந்திருந்தார்.

இச்சம்பவத்தில் ஈடுபட்டோரைக் கைது செய்யும் நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டுள்ள ஏறாவூர் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!