கொரோனா: மேலும் 7 பேர் பூரண குணம்!

இலங்கையில் மேலும் 07 கொரோனா வைரஸ் நோயாளர்கள் பூரணமாக குணமடைந்து இன்று வீடுகளுக்குச் சென்றுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைய, இதுவரையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,805 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், 130 கொரோனா தொற்றாளர்கள் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நாட்டில் இதுவரை 2 ஆயிரத்து 947 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதுடன், இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!