சுவீடனில் கொரோனாவால் உயிரிழப்பு அதிகரிப்பு!

சுவீடனில் பஞ்சம் காரணமாக 1869-ல் மொத்தமாக 55,431 பேர் மரணமடைந்துள்ளனர்.அதன் பின்னர் நீண்ட 150 ஆண்டுகளுக்கு பின்னர் 2020-ல் ஜனவரி முதல் ஜூன் வரையான முதல் ஆறு மாத காலத்தில் மட்டும் 51,405 பேர் இறந்துள்ளனர்.

ஆனால், 2019 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதத்தில் சுவீடனில் 6,500 பேர் மட்டுமே இறந்துள்ளனர்.சுவீடனில் இந்த ஆண்டு ஜூன் மாதம் வரை பதிவான இறப்புகளில் 4,500 பேர் மட்டுமே கொரோனாவால் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளதாக நாட்டின் புள்ளிவிவர அலுவலகம் தெரிவித்துள்ளது.

1.3 கோடி மக்கள் தொகை கொண்ட நாட்டில் இது மிக அதிகமான எண்ணிக்கை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஏப்ரல் மாதத்தில் மட்டும் கொரோனா தொடர்பான பாதிப்புகளால் இறப்பு விகிதம் 40 சதவீதம் அதிகரித்துள்ளது.

மேலும், எஞ்சிய ஐரோப்பிய நாடுகள் போன்று சுவீடன் கொரோனா பெருந்தொற்றை எதிர்கொள்ள ஊரடங்களை அமுல்படுத்தவில்லை, சமூக விலகலை பின்பற்றவும் மக்களிடம் கோரவில்லை, மாஸ்க் அணியவும் கட்டாயப்படுத்தவில்லை.

ஆரம்பப்பள்ளிகள், மேல்நிலைப்பள்ளிகள், உணவகங்கள், கபேக்கள் மற்றும் கடைகள் என திறந்தே இருந்தன.இதனால் எஞ்சிய ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பிடுகையில் பொருளாதாரம் சிறப்பான நிலையில் உள்ளது. ஆனால் அதற்கு பதிலாக சுவீடன் விலைமதிக்க முடியாத மனித உயிர்களை இழந்துள்ளது.

ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகளை அமுலுக்கு கொண்டுவந்திருந்தால் உயிர் இழப்புகளை கட்டுக்குள் கொண்டுவந்திருக்க முடியும் என சுவீடனின் முக்கிய அதிகாரி ஒருவர் தெரிவித்திருந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!