13ஆவது திருத்தம் குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை – கெஹெலிய ரம்புக்வெல

13ஆவது திருத்தம் குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

இதேவேளை நீண்ட காலம் தாமதமாகியுள்ள மாகாண சபை தேர்தல்கள் குறித்து அரசாங்கம் இதுவரை விவாதிக்கவில்லை என்றும், தேர்தலை நடத்துவதற்கு முன்பு சில சட்டங்கள் கொண்டு வரப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இருப்பினும், பொதுத் தேர்தல் இடம்பெற்று இரண்டு மாதங்களுக்குப் பின்னர் மாகாண சபைத் தேர்தல் நடைபெறும் என்று அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!