கடந்த வார மின்தடை: பதவி விலகத் தயார்- டலஸ் அழகப்பெரும

நாட்டில் கடந்த வாரம் ஏற்பட்ட மின்சாரத் தடங்கலுக்கு மின்சக்தி அமைச்சே காரணம் என்றால், பதவி விலகத் தயார் என அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

நாட்டில் கடந்த வாரம் மின்சார விநியோகத்தில் தடங்கல் ஏற்பட்டது.

இதனையடுத்து குறித்த விடயம் தொடர்பாக ஆராய்வதற்காக குழுவொன்று நியமிக்கப்பட்டது.

அக் குழுவின் அறிக்கை நாளை விடயத்திற்கு பொறுப்பான அமைச்சரிடம் கையளிக்கப்படவுள்ளது.

இந்நிலையில், மின் துண்டிப்புக்கு மின்சக்தி அமைச்சு பொறுப்புக்கூற வேண்டும் என்று உறுதியானால், அது தொடர்பாக தான் எடுக்கும் நடவடிக்கை தொடர்பாக அமைச்சர் டலஸ் அழகப்பெரும கருத்து வெளியிட்டுள்ளார்.

அதற்கமைய, தான் 96 மணித்தியாலங்களே மின்சக்தி அமைச்சராக இருந்துள்ளேன் என்றும், மின்சக்தி அமைச்சே தவறுக்கு காரணம் என்றால், செவ்வாய்க்கிழமையிலிருந்து மின்சக்தி அமைச்சிற்கு வேறு ஒருவர் அமைச்சராக நியமிக்கப்படுவார் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த நிகழ்வு இலங்கையில் முதற்தடவையாகப் பதிவாகும் எனவும் அமைச்சர் டலஸ் அழகப்பெரும குறிப்பிட்டுள்ளார்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!