ஒட்டுசுட்டான் மகா வித்தியாலயத்திற்கு புதிய வகுப்பறைக் கட்டடம்

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் மகா வித்தியாலயத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட வகுப்பறைக் கட்டடம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் மகா வித்தியாலயத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட இரு மாடி வகுப்பறைக் கட்டடம் மற்றும் ஆசிரியர் விடுதியை பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீகந்தராஜா வைபவரீதியாக திறந்து வைத்தார்.

அருகில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை’ எனும் திட்டத்தின் கீழ், கல்வியமைச்சின் 12 மில்லியன் ரூபா நிதியில் இரண்டு மாடி வகுப்பறை கட்டடமும், 9 மில்லியன் ரூபா செலவில் ஆசிரியர் விடுதியும் புதிதாக நிர்மாணிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது.

ஒட்டுசுட்டான் மகா வித்தியாலய அதிபர் க.ஜோகேஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற திறப்பு விழா வைபவத்தில் பிரதேசசபை உறுப்பினர், வலயக்கல்வி பணிப்பாளர், பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து சிறப்பித்தனர். (நி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!