பாகிஸ்தானின் கைபர் பக்துன்குவா மாகாணத்தின் ஹரிப்பூர் மாவட்டத்தில் உள்ள ஆற்றில் 80 பேருடன் பயணித்த படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 30பேர் உயிரிழந்துள்ளனர்.
படகின் கொள்ளவிற்கு அதிகமாக, பயணிகளை படகில் ஏற்றியமையே விபத்துக்கு காரணம் என பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.
இதேவேளை, நீரில் மூழ்கியவர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், உயிரிழந்தவர்களில் நான்கு சிறுவர்களும் அடங்குவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
படகில் பயணித்த பலர் மீட்கப்பட்டு வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது. (நி)