அம்பாறை மாவட்டத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க உகந்தை அருள்மிகு ஸ்ரீ முருகன் ஆலய ஆடிப்பூரணை மகோற்சவ பெருவிழாவின் கொடியேற்றத்தின் பின்னர் அங்கிருந்து கதிர்காமத்தை நோக்கி பாதயாத்திரை ஆரம்பமானது.
இந்நிலையில், பாதயாத்திரை சென்ற ஆயிரக்கணக்கான அடியவர்களுக்கு அகில இலங்கை இந்துமாமன்றத்தின் அனுசரணையுடன் கல்முனை சிவநெறி அறப்பணி மன்றமும் ஆலையடிவேம்பு பிரதேச திருநீலகண்டர் சைவ மகா சபையும் இணைந்து குடிநீர்ப் போத்தல்களை வழங்கி வைத்தனர்.(நி)