பொதுத்தேர்தல் 2020 – தமிழ் சிவில் சமூக அமையம் அறிக்கை

தமிழ் அரசியல் பரப்பில், தமிழ்த் தேசியக் கட்சிகளிலிருந்து பலகட்சி பிரதிநித்துவத்தின் பொறுப்புக்கூறலை ஏதுப்படுத்த, இம்முறைத் தேர்தலில் வாய்ப்பளிக்குமாறு தமிழ் சிவில் சமூக அமையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

தமிழ் சிவில் சமூக அமையத்தின் இணைப்பேச்சாளர்களென அருட்பணி வீ.யோகேஸ்வரன், கலாநிதி குமாரவடிவேல் குருபரன் ஆகியோரின் பெயரிடப்பட்டு குறித்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இவ் அறிக்கையில் ‘தமிழ் தேசியக் கூட்டமைப்பைத் தவிர, தமிழ் தேசியப் பரப்பில் தம்மை மாற்றாக முன்வைக்கும் இரண்டு அணிகள் பிரதானமாக எம்முன் உண்டு.

ஒன்று தமிழ் தேசிய மக்கள் முன்னணி, இரண்டாவது தமிழ் தேசிய மக்கள் கூட்டணி. இவர்களுக்கு வாக்களிப்பதாயின் மேற்சொன்ன கட்சிகள் கூட்டமைப்பு தொடர்பில் முன்வைக்கும் விமர்சனங்களைத் தாண்டி அவர்கள் முன்வைக்கும் மாற்று யோசனைகள் எவை எனக் கணித்து அந்த மதிப்பீட்டின் பெயரில் தமது முடிவை தமிழ் மக்கள் எடுக்க வேண்டும் என நாம் கருதுகிறோம். வெறுமனே விமர்சனங்கள் மூலமாக மாற்றரசியல் கட்டியமைக்கப்பட முடியாது என நாம் கருதுகிறோம்.

மாற்று அரசியல் அவசியமானது ஆனால் அதன் உள்ளடக்கம் போதுமானளவு தெளிவாக பேசப்படவில்லை என்றே நாம் கருதுகிறோம். இந்த இடத்தில் தமிழ் மக்கள் மத்தியில் முன்வைக்கப்படும் ‘ஒற்றுமை’, ‘ஓரணியில் பேரம் பேச ஆணை’ போன்ற கோசங்களை சற்று அவதானமாக அணுக வேண்டும் என நாம் கேட்டுக் கொள்கின்றோம்.

தமிழ் தேசிய பரப்பை ஒரு கட்சி மாத்திரம் பிரதிநித்துவப்படுத்துகின்ற சூழல் அந்த கட்சி மக்களுக்கு பொறுப்பு
கூறாமல் எதேச்சாதிகாரமாக செயற்படுவதற்கு வாய்ப்பளிப்பதை நாம் அனுபவ ரீதியாக கடந்த 10
ஆண்டுகளில் கண்டுள்ளோம். எனவே தமிழ் தேசிய பரப்பில் பலகட்சி பிரதிநித்துவம் பொறுப்புக்கூறலை
ஏதுப்படுத்த வாய்ப்பளிக்கலாம். மேலும் தெற்கில் அமையப் போகும் அரசாங்கம் மிகப் பலமானதாக
அமையும் என்பது தெளிவாக தெரிகிறது. எனவே அதனுடன் ஆசனங்களின் எண்ணிக்கையை காட்டி
பேரம் பேசுவது சாத்தியமில்லை.

தமிழ் பிரதிநிதித்துவ அரசியல் பரப்பை மக்கள் மயப்படுத்தும் வகையில், எமது பிரதிநிதிகள் எமக்கு பொறுப்புக் கூறுவதை சாத்தியமாக்கும் வண்ணம் மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும் எனக் கோருகின்றோம்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!