நள்ளிரவு 12 மணியுடன் பிரசாரத்திற்கும் தடை : மஹிந்த தேசப்பிரிய

தேர்தல் பிரசாரத்துக்கான பொறிமுறைகளை இன்று இரவு 10.00 மணியின் பின்னர் பயன்படுத்துவது தடை செய்யப்பட்டுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய அறிவித்துள்ளார்.

எனவே அமைதிக் காலத்தில் சட்டத்துக்கு முரணாக செயற்படுபவர்களுக்கு எதிராகத் துரிதமாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

இன்று நள்ளிரவு 12 மணிக்கு பின்னர் பிரசாரக் கூட்டங்களை நடத்துதல், கிராமங்களிலும் வீடுகளிலும் கூட்டங்களை நடத்துதல், வீடு வீடாகச் சென்று வாக்குகளை கேட்டல், துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தல் ஆகியன தடை செய்யப்பட்டுள்ளன.

அத்துடன், அறிவித்தல் கொடுக்கப்பட்ட கிளை அலுவலகங்களில் பிரசாரப் பலகைகளை காட்சிப்படுத்தியிருத்தல் மற்றும் சுவரொட்டிகளையும் அறிவித்தல்களையும் பதாதைகளையும் காட்சிப்படுத்தல் என்பவற்றுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இன்று நள்ளிரவின் பின்னர் ஆரம்பமாகும் அமைதி காலப்பகுதியினுள் அனைத்து அரசியல் கட்சிகள், குழுக்கள், வேட்பாளர்கள் இவற்றைத் தவிர்த்து சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலொன்றுக்கு ஒத்துழைப்பு வழங்கவேண்டும் எனவும் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!