JAFFNA HOT TALENT- 2020′ இறுதிச் சுற்று நாளை!!

யாழ்ப்பாணம் தீபகற்பத்தில் உள்ள தமிழ் இளைஞர் யுவதிகளின் திறமைகளை உலகறியச் செய்யும் ‘JAFFNA HOT TALENT- 2020’ மாபெரும் இறுதிச் சுற்றுக்கான அனைத்து நடவடிக்கைகளும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாக யாழ். பாதுகாப்புப் படைகளின் கட்டளைத் தளபதி தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாண தமிழ் இளைஞர் யுவதிகளின் திறமைகளை உலகறியச் செய்யும் வகையில் முதன் முறையாக ஒழுங்கமைக்கப்பட்டுள்ள நடன மற்றும் பாடல் கலைத்திறமையை வெளிக்கொண்டுவரும் அரியதோர் சந்தர்ப்பமாக, யாழ் பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதியின் எண்ணக்கருவிற்கு அமைவாக ‘JAFFNA HOT TALENT- 2020’ மாபெரும் சுற்றுப் போட்டி ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

‘JAFFNA HOT TALENT- 2020’ மாபெரும் இறுதிச் சுற்றானது நாளைய தினம் மாலை 3.30 மணியளவில் யாழ்ப்பாணம் தந்தை செல்வா மண்டபத்தில் சுகாதார நடமுறைகளுக்கு அமைவாக நடாத்துவதற்கு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாக யாழ். பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதி தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!