மட்டு, களுவாஞ்சிகுடியில் இரு கட்சி ஆதரவாளர்களுக்கு இடையில் மோதல்

மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவில் நேற்றிரவு, இரு அரசியல் கட்சிகளுக்கிடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேற்படி சம்பவம் நேற்றிரவு மட்டக்களப்பு தேற்றாத்தீவு கிராமத்தில் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, ஸ்ரீ லங்கா பொதுஜனப் பெரமுனக் கட்சியில் போட்டியிடும் சந்திரகுமாரின் அதரவாளர்களுக்கும், தமிழர் விடுதலைக் கூட்டணியில் போட்டியிடும் தவறாணியின் ஆதரவாளர்களுக்குமிடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது.

இச்சம்பவத்தில் ஒருவர் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் இரண்டாம் விடுதியில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் இவ் இரு அணியினரும் களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டினை பதிவு செய்துள்ளதாகவும் எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!