யாழில் தேர்தல் தொடர்பில் கலந்துரையாடல்!

எதிர்வரும் பொதுத் தேர்தலை, நீதியாகவும் நேர்மையாகவும் நடத்துவது தொடர்பில், பொலிசாருக்கும் தேர்தல் கடமையில் ஈடுபடவுள்ள அரச உத்தியோகத்தர்களுக்கும் இடையில், யாழ்ப்பாணத்தில் விசேட சந்திப்பு நடைபெற்றது.

யாழ். மாவட்டத்தில், தேர்தலை நீதியாகவும் நேர்மையாகவும் நடத்துவது தொடர்பில், ஒழுங்கமைப்புக்களுக்கு பொறுப்பான உதவி தெரிவத்தாட்சி அலுவலர்களுக்குக்கும் பொலிஸாருக்கும் இடையிலான விசேட சந்திப்பு, யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் இடம்பெற்றது.

இதன் போது, யாழ்ப்பாண மாவட்டத்தில், தேர்தல் திணைக்களத்துடன் இணைந்து மேற்கொள்ளப்பட வேண்டிய வேலைத் திட்டங்கள் மற்றும் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

கூட்டத்தின் போது, அமைக்கப்படவுள்ள 508 வாக்களிப்பு நிலையங்களின் பாதுகாப்பு நடைமுறைகள், தற்போதுள்ள சூழ்நிலையில் பின்பற்றப்பட வேண்டிய சுகாதார நடைமுறைகள், வாக்களிப்பின் பின் மேற்கொள்ளப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பில் ஆராயப்பட்டது.

யாழ். மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர் க.மகேசன் தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தில், யாழ்ப்பாண மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர், பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், யாழ்ப்பாண மாவட்ட செயலக தேர்தல் திணைக்கள அதிகாரிகள், தேர்தல் ஒழுங்கமைப்புகளுக்கு பொறுப்பான உதவி தெரிவத்தாட்சி அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!