மட்டு. காத்தான்குடியில் பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கு, தீ அணைப்பு பயிற்சி

மட்டக்களப்பு காத்தான்குடி பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கு தீ அணைப்பு தொடர்பான பயிற்சி
செயலமர்வொன்று இன்று நடைபெற்றது.

காத்தான்குடி பிரதேச செயலாளர் யு.உதயஸ்ரீதரின் வேண்டுகோளின் பேரில் மட்டக்களப்பு மாநகர சபை மேயர் தியாகராஜா சரவணபவனின் பணிப்புரையின் கீழ் மட்டக்களப்பு மாநகர சபையின் தீ அணைக்கும் பிரிவினரால் இந்த தீ அணைப்பு செயலமர்வு நடாத்தப்பட்டது.

காத்தான்குடி பிரதேச செயலாளர் யு.உதயஸ்ரீதர் தலைமையில் நடைபெற்ற இந்த செயலமர்வில் காத்தான்குடி பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் கிராம உத்தியோகத்தர்கள் சமுர்த்தி முகாமையாளர்கள் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் வெளிக்கள உத்தியோகத்தர்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

இதன் போது மட்டக்களப்பு மாநகர சபையின் தீ அணைக்கும் பிரிவு பொறுப்பதிகாரி பி.பிரதீபன் தீ அணைப்பு தொடர்பாக உத்தியோகத்தர்களுக்கு விளக்கமளித்ததுடன் செயற்முறை பயிற்சிகளையும் வழங்கினார்.

தீ அணைப்பின் போது எவ்வாறு நடந்து கொள்ள வேண்டுனெவும் செய்துகாட்டப்பட்டது.

ஒவ்வொரு வீட்டிலும் தீ அணைப்பு இயந்திரம் இருப்பதுடன் தீ அணைக்கும் முறை தொடர்பாக ஒவ்வொருவரும் அறிந்து வைத்திருக்க வேண்டும் எனவும் மட்டக்களப்பு மாநகர சபையின் தீ அணைக்கும் பிரிவு பொறுப்பதிகாரி பி.பிரதீபன் இதன் போது தெரிவித்தார். (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!