திருமலையில், 5 மாணவர்கள் படுகொலை வழக்கு : சந்தேக நபர்கள் 13 பேர் விடுதலை

திருகோணமலையில், 2006 ஆம் ஆண்டு 5 பல்கலைக்கழக மாணவர்கள் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், சந்தேக நபர்கள் 13 பேரும் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

திருகோணமலை பிரதான கடற்கரையில், 2006 ஆம் ஆண்டு, கிழக்கு பல்கலைக்கழகத்தை சேர்ந்த 5 மாணவர்கள் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டனர்.

அதனைத்தொடர்ந்து, அந்த வழக்கு விசாரணைகள் நீதிவான் நீதிமன்றத்தில் இடம்பெற்று வருகின்றது.

தொடர்ந்து சந்தேகத்தின் பெயரில் 13 பேர் கைது செய்யப்பட்டு, பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

அந்த வகையில், வழக்கு இன்று இறுதி தீர்ப்பிற்காக, நீதிவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன் போது, தகுந்த சாட்சியம் இல்லாத பட்சத்தில் அல்லது நீதிமன்றத்தில் சாட்சியம் தோற்றம் அளிக்காத நிலையில், எதிரிகள் 13 பேரையும், நீதிவான் நீதிமன்ற நீதிபதி முகமட் கம்சா, விடுதலை செய்ய உத்தரவு பிறப்பித்தார். (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!