ஹ்ரான் குழுவினர் வாடகைக்கு அமர்த்திய வாகனம் பிணையில் விடுதலை

தற்கொலை குண்டுத் தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரியான ஹ்ரான் ஹஷிம் குழுவினரால் பயன்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு, பொலிஸாரினால் கைப்பற்றப்பட்ட டொல்பின் ரக வாகனம், கடும் நிபந்தனையுடன் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளது.

இன்று, கல்முனை நீதவான் நீதிமன்ற நீதிபதி ஐ.என்.றிஸ்வான் முன்னிலையில், சாய்ந்தமருது பகுதியில் தாக்குதல் இடம்பெற முன்னர், தற்கொலை குண்டுத்தாக்குதலில் மரணமடைந்த ஷஹ்ரான் குழுவினர், வாடகை வான் ஒன்றின் மூலம், மீரிகம ஹந்தாமுல்ல பகுதியிலுள்ள ஆடை விற்பனை நிலையமொன்றில், சிங்களப் பெண்கள் அணியும் 10 வெள்ளை நிற ஆடை உள்ளிட்ட பொருட்களை கொள்வனவு செய்திருந்தனர்.

இவ்வாறு வாடகை மூலம் பெறப்பட்ட வான், கடந்த சில தினங்களுக்கு முன்னர் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டிருந்தது.

இந்நிலையில், இது தொடர்பான வழக்கு, மன்றில் நீதிவானால் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, கடும் நிபந்தனைகளுடன், 50 இலட்சம் ரூபா பிணையில் வான் விடுவிக்கப்பட்டுள்ளது.

இதன் போது, விடுவிக்கப்பட்ட வான், வாடகை அடிப்படையில் பெறப்பட்ட போதிலும், பிணையில் விடுவித்த நீதிவான், உரிமையாளரிடம் வழக்கு தவணை நிறைவு பெறும் வரை, வாகன ஆவணத்தில் பெயர் மாற்றம் செய்தல், விற்பனை செய்தல், கைமாற்றுதல், உருமாற்றுதல் போன்ற செயற்பாட்டில் ஈடுபட வேண்டாம் என எச்சரிக்கை விடுத்து விடுதலை செய்துள்ளார்.

வான், அம்பாறை விசேட பொலிஸாரினால், இன்று காலை நீதிமன்றத்திற்கு கொண்டுவரப்பட்டதுடன், வாகனத்தை வாடகை அடிப்படையில் செலுத்தி சென்ற சாரதி கைது செய்யப்பட்டு, இன்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இச்சாரதி, தனது வாகனம் இன்னுமொரு தரப்பிற்கு வாடகைக்கு வழங்கியதாக கூறி, மேற்குறித்த பிணையில் விடுவிக்கப்பட்ட வாகன உரிமையாளரை அணுகி, அதிக விலையில் வாடகை ஒன்று வந்துள்ளதாக கூறி, வாகனத்தை கைமாறி எடுத்துச் சென்றுள்ளமை, பொலிஸாரின் விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.

பிணையில் விடுவிக்கப்பட்ட வான் உரிமையாளர், வெளிநாடு ஒன்றில் இருப்பதாகவும், வாகனத்தின் ஆவணங்களில், தனது மனைவியின் பெயரை பதிந்துள்ளமையினால், பிணையில் விடுவிக்கப்பட்ட வானை, குறித்த பெண்ணே நீதிமன்றத்திற்கு சென்று எடுத்துச் சென்றுள்ளார்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!