நுவரெலியாவில் பாதுகாப்பற்ற புகையிரத கடவைகள் : மக்கள் விசனம்

நுவரெலியாவில் உள்ள பாதுகாப்பற்ற புகையிரத கடவைகள் தொடர்பில், மக்கள் விசனம் வெளியிட்டுள்ளதுடன், பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

ஹட்டன் புகையிரத நிலையத்திற்கு சமீபமாக, ஹட்டன் கொழும்பு பிரதான வீதியிலிருந்து சுமார் 30 அடி தூரத்தில், மல்லிகைப்பூ பகுதியில் உள்ள புகையிரத கடவை, கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக பாதுகாப்பற்ற நிலையிலேயே காணப்படுவதாக, பொது மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

இந்த பாதுகாப்பற்ற கடவையை, நாளாந்தம் கடந்தே ஹட்டன் நகரில் உள்ள பிரதான பாடசாலைகளான, புனித கப்ரியல் மகளிர் கல்லூரி, புனித ஜோன் பொஸ் கல்லூரி, ஸ்ரீபாத சிங்கள மகா வித்தியாலயம், ஹைலன்ஸ் மத்திய கல்லூரி ஆகியனவற்றுக்கு செல்லும் மாணவர்கள் செல்வதுடன், பாடசாலை சேவை வான்கள் மற்றும் பஸ்கள் தினமும் பயணிக்கின்றன.

அத்துடன், வில்பர்டபுரம், எரோல், பொலிஸ் அதிகாரி காரியலயம் உள்ளிட்ட பிரதேசங்களுக்கு செல்வதற்கும், இந்த வீதியியையே பொது மக்கள் பயன்படுத்துகின்றனர்.

ஆனால், இந்த இடத்தில் பாதுகாப்பு கடவைக்கு சமீபமாக உள்ள பாதுகாப்பு உத்தியோகத்தர்கள், புகையிரத்தின் சத்தினை கேட்ட பின்பே, ஒரு பக்கம் மாத்திரம் உள்ள கடவையை மூடுகின்றனர் எனவும், மறுபக்கத்தில் கடவையில்லாததன் காரணமாக, எப்போது வேண்டுமானாலும் விபத்து ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும், பொது மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

இதேவேளை, மல்லிகைப்பூ பகுதியில் உள்ள புகையிரத கடவையில், புகையிரதம் வரும் அவதானிப்பதற்காக பொருத்தப்பட்டுள்ள இண்டு கண்ணாடிகளும், புற்களால் மூடப்பட்டு காணப்படுவதாகவும், இதனால் புகையிரதம் வருவதனை கூட அவதானிக்க முடியாத நிலை இருப்பதாகவும், மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த விடயம் தொடர்பில், ஹட்டன் பொலிஸ் நிலையத்தில் பல தடைவைகள் தெரிவித்த போதிலும் இது குறித்து எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என, மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

எனவே விபத்து ஏற்படுவதற்கு முன்னர், பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர். (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!