லிபியாவில் வான்வழி தாக்குதல் 40 பேர் பலி!

லிபியாவில் அகதிகள் முகாம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதில் 40 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

லிபியா தலைநகர் திரிபோலியின் புறநகர் பகுதியான தஜூரா என்ற இடத்தில் காணப்படும்அகதிகள் முகாம் மீதே தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த அகதிகள் முகாமில் ஆப்பிரிக்க நாடுகளான சோமாலியா, சூடான் உள்ளிட்ட நாடுகளை சேர்ந்தவர்கள் அகதிகளாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், இந்த முகாம் மீது வான்வழி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலில் 40 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த தாக்குதலுக்கு, லிபியாவில் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட அரசுக்கு எதிராக கிளர்ச்சி செய்து வரும் ஜெனரல் கலிஃபா ஹப்டர் தான் காரணம் என்று அந்நாட்டு அதிகாரிகள் குற்றம் சாட்டினர். லிபியாவை கைப்பற்ற போகிறோம் என்ற கோஷத்தோடு ஜெனரல் கலிஃபா ஹப்டர் மூன்று மாதங்களுக்கு மேலாக இது போன்ற தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. (நி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!