வடக்கு மாகாணத்தின் கல்வி செயலாளரை மாற்றுவதன் ஊடாக, கல்வி தரத்தை உயர்த்த முடியாது என வடக்கு மாகாண அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாண கல்வியமைச்சின் செயலளரை மாற்றியதன் மூலம் வடக்கு மாகாணத்தின் கல்வி தரத்தை உயர்த்த முடியாது என்றும், வடக்கு ஆசிரியர்களின் பிரச்சினைகள் தொடர்பில் விசேட கவனம் எடுக்க வேண்டும் என வடக்கு மாகாண அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தெரிவித்தார்.
வடக்கின் கல்வித்தரத்தை உயர்த்த வேண்டுமேயானால், வடக்கு மாகாண கல்வியமைச்சின் செயலாளரை மாற்றினால் மாத்திரம் போதாது, ஆசிரியர்களின் பிரச்சினைகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தி, அவர்களது பிரச்சினையை தீர்த்து வைக்க வேண்டும் என சீ.வி.கே.சிவஞானம் தெரிவித்தார்.
செயலாளரை மாற்றுவதன் மூலம், நிர்வாக ரீதியாக சிறுமாற்றங்கள் மாத்திரமே ஏற்படும் எனவும் குறிப்பிட்டார்.
அத்தோடு, வடக்கில் உள்ள அனைத்து செயலாளர்களையும் மாற்றவேண்டும் என்றும் வடக்கு மாகாண அவைத்தலைவர் குறிப்பிட்டுள்ளார். (நி)