மகாவலி சீ வலயத்தின் சுற்றுலாத்துறை மேம்பாட்டிற்காக தெஹியத்தகண்டிய பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்ட ‘மகாவலி மங்சல’ சுற்றுலா விடுதியை ஜனாதிபதி நேற்று திறந்து வைத்தார்.
இயற்கை வளங்களைக் கொண்ட மகாவலி வலயங்களின் அழகினை இரசிப்பதற்கு உள்நாட்டிலிருந்தும் வெளிநாட்டிலிருந்தும் வருகை தரும் சுற்றுலா பயணிகளுக்கு சௌகரியமான தங்குமிட வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்கும் முகமாக ‘மகாவலி மங்சல’ சுற்றுலா விடுதி நிர்மாணிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. (நி)