உகந்தமலை ஸ்ரீ முருகன் ஆலய வருடாந்த மஹோற்சவம் இன்று ஆரம்பமானது.
வரலாற்றுப் பெருமையும், புகழும் கொண்டு விளங்கும் இலங்கைத் திருநாட்டின் கிழக்கு மாகாணத்தில் தென்கோடியில் நாநிலங்களும் சமூத்திரமும் சூழப்பெற்ற இயற்கை எழில் கொண்ட அருள்மிகு உகந்தமலை ஸ்ரீ முருகன் ஆலய வருடாந்த மஹோற்சவ கொடியேற்ற திருவிழா இன்று ஆரம்பமானது.
ஆலய பிரதம குரு சிவாகம கிரியாயோதி, ஈசானசிவச்சாரியார் சிவஸ்ரீ க.கு.சீதாராம் குருக்கள் தலைமையிலான குருமார்களின் வேதாகம கிரியைகளுடன் பக்தர்களின் அரோஹரா கோசத்துடன் கொடி ஏற்றி வைக்கப்பட்டது.
உகந்தை மலை ஸ்ரீ முருகன் ஆலயத்தின் கொடியேற்ற திருவிழாவில் கலந்து கொள்ளும் நோக்கில் வடக்கு,கிழக்கில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டனர்.
கொடியேற்றத்தை தொடர்ந்து தினமும் 16நாட்கள் விஷேட யாகங்கள், கிரியைகள் இடம்பெற்று முருகப்பெருமான் எழுந்தருளி காட்சியளிக்கவுள்ளார்.
எதிர்வரும் 18 ஆம் திகதி வியாழக்கிழமை காலை சமுத்திர தீர்த்தோற்சவமும், மறுநாள் 19ஆம் திகதி வெள்ளிக்கிழமை இரவு வைரவர் பூஜையுடன் இவ்வாண்டுக்கான உகந்தமலை ஸ்ரீ முருகன் ஆலய வருடாந்த மஹோற்சவ கொடியேற்ற திருவிழா நிறைவடையும் என ஆலய வண்ணாக்கர் ஜே.எஸ்.டி.எம்.சுதுநிலமே திசாநாயக்க தெரிவித்துள்ளார். (நி)