அம்பாறை, திருக்கோவில் பிரதேச பாடசாலைகளுக்கு தொற்று நீக்கி தெளிகருவிகள் கையளிப்பு!

நாட்டில் பாடசாலைகளை ஆரம்பித்தல் தொடர்பில் அரசாங்கம் பல்வேறு சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்ற நிலையில், அதற்கு ஆதரவாக பல்வேறு அரச சார்பற்ற தொண்டு நிறுவனங்கள் உதவிகளையும் வழங்கி வருகின்றன.

இந்நிலையில் கொவிட் 19 கிருமி தொற்று நீக்கும் நடவடிக்கைகளை துரிதப்படுத்தும் நோக்குடன், திருக்கோவில் பிரதேச பாடசாலைக்கான தொற்று நீக்கி தெளிகருவிகளை பெற்றுக்கொடுக்கும் செயற்பாடுகளை அம்பாறை மாவட்ட சமூக நல்வாழ்வு அமைப்பான சுவாட் இவ் கருவிகளைப் பெற்றுக் கொடுத்துள்ளன.

திருக்கோவில் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி எம்.ஏ.பிரசாந் தலைமையில் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தில் நேற்று மாலை நடைபெற்ற நிகழ்வில், திருக்கோவில் பிரதேச செயலாளர் ரீ.கஜேந்திரன் சுவாட் அமைப்பின் தலைவர் வி.பரமசிங்கம் சுகாதார துறையினர் மற்றும் பாடசாலையின் அதிபர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.

இவ் உதவிகள் சுவிஸ் டெவலப்மன்ட கோப்பரேசன் பண்ட் நிதியீட்டத்துடன் கொள்வனவு செய்யப்பட்ட மூன்று தெளிகருவிகள், பாடசாலையின் அதிபர்களிடம் திருக்கோவில் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி ஊடாக கையளிக்கப்பட்டுள்ளன.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!