உலக கிண்ண கிரிக்கெட் போட்டிகளின் பரபரப்பான போட்டியில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் இன்று மோதுகின்றன.
உலக கிண்ண கிரிக்கெட் தொடரில், அரையிறுதி போட்டிக்கு செல்லவுள்ள அணியை தீர்மானிக்கும் போட்டியில், இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் இன்று பலப்பரீட்சை நடாத்துகின்றன.
இன்றைய முக்கியத்துவம் மிக்க போட்டி இலங்கை நேரப்படி பிற்பகல் 3 மணியளவில் இடம்பெறவுள்ளது.
இன்றைய போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்றால் நேரடியாக அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பினை பெற்றுவிடும், அதேவேளை தோல்வியடைந்தால் பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஸ் அணிகள் விளையாடும் போட்டியில், பங்களாதேஸ் அணி வெற்றிபெற்றால் மாத்திரமே அரையிறுப்போட்டிக்கு தகுதி பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு
கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. (நி)