யாழ்ப்பாணத்தில் ஹெரோயினுடன் இளைஞன் கைது!

யாழ்ப்பாணத்தில் 4 கிராம் ஹெரோயின் போதைப் பொருளை உடைமையில் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில், இளைஞர் ஒருவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் பெரியகோவில் வீதிப் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருள் கடத்தப்படுவதாக யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில், பொலிசார் மேற்கொண்ட விசாரணையில் இந்த கைது சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கைதுசெய்யப்பட்ட இளைஞன் மணியந்தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் எனவும், அவரிடமிருந்து 4 கிராம் 680 மில்லிக் கிராம்
ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!