தேர்தலை இலக்காகக் கொண்டே மாணவர்களுக்கு லப்டொப் – சஹான் சேமசிங்க

தேர்தலை இலக்காகக் கொண்டே மாணவர்களுக்கு லப்டொப் கணனிகளை வழங்கும் அறிவித்தலை விடுத்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் செகான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தற்போதய அரசாங்கம் 2015ம் ஆண்டு கூறிய பொய் உறுதிமொழியினை தற்போது நடைமுறைப்படுத்துவதற்கு முயல்கின்றது. தேசிய பாடசாலைகளில் கல்வி கற்கும் அனைத்துப் பிள்ளைகளும் கணனி மூலம் கல்வி கற்பதற்காக லப்டொப் கணனிகளை வழங்கப்போவதாக பிரதமர் ரணில் கூறுகின்றார். அடுத்தப் பக்கத்தில் ஜனாதிபதி கூறுகின்றார் தெரிவு செய்யப்பட்ட தேசிய பாடசாலைகளில் கணனி அறிவு முன்னேற்றத்திற்காக கணனிகளை வழங்கப் போவதாக எனவே இந்த அரசாங்கம் கல்வியை வைத்து ஏதோ ஒன்றை செய்ய முயல்கின்றது. மாணவர்களுக்குள் பிரிவினையை ஏற்படுத்த இந்த அரசாங்கம் திட்டம் போடுகின்றது.

நாம் அரசாங்கத்திடம் கோருகின்றோம். மகிந்தோதய திட்டம் ஊடாக ஒவ்வொரு பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதியிலும் மூன்று பாடசாலைகளை தெரிவு செய்து அதற்கு கணனிகளை வழங்கி அனைத்து மாணவர்களும் கணனிக் கல்வியை தொடர வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்திருந்தோம். அப்போது அமைச்சராக இருந்த பந்துலகுணவர்த்தன அவர்கள் தனது தலமைத்துவத்தின் ஊடாக ஒரு பாடசாலைக்கு 64 கணனிகளை வழங்கி மாணவர்கள் அனைவரும் ஒரே மாதிரியாக பயன்படும் திட்டத்தினை நடைமுறைப்படுத்தியிருந்தோம். அதனுடாக மாணவர்களை பிரிக்காது ஒருவருக்கு ஒருவர் வித்தியாசம் பார்க்காது கல்வியை தொடர வாய்ப்பளித்தோம். அவர்கள் புதிய உலகத்திற்கு செல்வதற்கு வளிஏற்படுத்தியிருந்தோம்.

ஆனால் இந்த அரசாங்கம் எந்தவிர பிரியோசனமும் இல்லாத தூர நோக்கம் அற்ற, இது எவ்வாறு அமையும் என்ற ஒரு கருத்து கணிப்பு இல்லாது தேர்தலை இலக்காகக் கொண்டு தெரிவு செய்யப்பட்;ட சில பாடசாலைகளில் இத்திட்டத்தினை நடைமுறைப்படுத்த முயல்கின்றது. (மு)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!