முல்லைத்தீவில் பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினரால், இளைஞன் கைது!

முல்லைத்தீவு கேப்பாபுலவு கிராமத்தில் பயங்கரவாத குற்றத்தடுப்பு விசாரணை பிரிவினரால் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பயங்கரவாதத்தினை ஊக்குவிக்கும் செயற்பாடுகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் முள்ளியவளை பொலீஸ் பிரிவிற்கு உட்பட்ட கேப்பாபுலவைச் சேர்ந்த, நவரத்தினம் டிலக்சன் என்ற 25 வயதுடைய இளைஞனே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்றிரவு அவரது வீட்டிற்கு சென்ற பயங்கரவாத குற்றத்தடுப்பு விசாரணைப்பிரிவினர், குறித்த இளைஞனைக் கைதுசெய்வதற்கான ஆவணத்தினை வழங்கி, கைதுசெய்து விசாரணைக்காக அழைத்து சென்றதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!