கடலில் தத்தளித்த இந்திய மீனவர்களை மீட்ட இலங்கைக் கடற்படை!

விசைப்படகு பழுதடைந்ததால் கடந்த மூன்று நாட்களாக நடுக்கடலில் தத்தளித்த இந்தியா இராமேஸ்வரத்தைச் சேர்ந்த 4 மீனவர்களை மீட்ட இலங்கை கடற்படையினர், விசாரணைக்குப் பின்னர், மீனவர்களை இந்திய கடலோர காவல் படையிடம் ஒப்படைத்துள்ளனர்.

ராமேஸ்வரத்ததை சேர்ந்த ஒருவருக்குச் சொந்தமான விசைப்படகில், இராமேஸ்வரம் பகுதியை சேர்ந்த செல்வகுமார், பசீர், அண்ணாதுரை, சீனி ஆகிய நான்கு மீனவர்கள் கடந்த சனிக்கிழமை காலை ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து மீன் பிடிக்க கடலுக்குள் சென்றுள்ளனர்.

மீனவர்கள் சனிக்கிழமை இரவு நடுக்கடலில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு கொண்டிருந்தபோது விசைப்படகின் இஞ்சினில் இயந்திர கோளாறு ஏற்பட்டு படகு நடுக்கடலில் பழுதடைந்துள்ளது.

இதனால் படகில் இருந்த மீனவர்கள் கரைக்கு திரும்ப முடியாமல் நடுக்கடலில் தத்தளித்துள்ளனர்.

அப்போது விசைப்படகு கடல் சீற்றம் காரணமாக இலங்கைப் பகுதியான மன்னார் கடல் பகுதிக்குள் இழுத்துச் செல்லப்பட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த ஞாயிற்றுகிழமை மாலை அவ்வழியாக ரோந்துப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இலங்கை கடற்படையினர், மீனவர்களையும், படகையும் மீட்டு சர்வதேச கடல் எல்லையில் வைத்து விசாரணை நடத்திய பின், இந்திய கடலோர காவல் படையினரிடம் மீனவர்களையும், விசைப்படகையும் ஒப்படைத்தனர்.

இலங்கைக் கடற்படையினரால் ஒப்படைக்கப்பட்ட நான்கு மீனவர்களையும், படகையும், இந்திய கடலோர காவல்படையினர், இராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகம் அருகே வைத்து நேற்று சக மீனவர்களிடம் ஒப்படைத்தனர்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!