அஞ்சல் மூல வாக்குச்சீட்டுக்கள் விநியோகம்!

பொது தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்குச்சீட்டுக்கள் இன்று முதல் விநியோகிக்கப்படவுள்ளன.

இதற்கமைய இன்று, நாளை மற்றும் நாளை மறுதினம் ஆகிய மூன்று நாட்களிலும் அஞ்சல்மூல வாக்குச்சீட்டுக்கள் அடங்கிய ஆவணங்கள் நாடளாவிய ரீதியில் உள்ள தெரிவத்தாட்சி அலுவலங்களுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளன.

இம்முறை தேர்தல் குறித்த அஞ்சல் மூல வாக்களிப்பிற்காக 7 இலட்சத்து 5 ஆயிரத்து 85 பேர் தகுதிபெற்றுள்ளனர்.

இதற்கமைய அடுத்த மாதம் 14,15,16,17 மற்றும் 20,21 ஆம் ஆகிய திகதிகளில் அஞ்சல் மூல வாக்களிப்பு இடம்பெறவுள்ளது.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!