பிரதமரைச் சந்தித்தார் மாலைதீவு உயர்ஸ்தானிகர்!

பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவிற்கும், மாலைதீவு உயர்ஸ்தானிகர் ஒமார் அப்துல் ரசாக்கிற்கும் இடையில் விசேட சந்திப்பு ஒன்று நடைபெற்றுள்ளது.

இந்த சந்திப்பு நேற்று அலரிமாளிகையில் இடம்பெற்றது.

கொவிட் 19 தொற்று காரணமாக பாதிக்கப்பட்டு, ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள மாலைதீவு, எதிர்வரும் 15 ஆம் திகதி மீண்டும் திறக்கப்படவுள்ளது.

இந்நிலையில் மாலைதீவில் ஹோட்டல் துறையில் தொழிலில் ஈடுபடும் இலங்கை பணியாளர்கள், வழமையைப் போன்று தமது பணியில் ஈடுபட வாய்ப்புக்கிடைக்கும் என மாலைதீவு உயர்ஸ்தானிகர், பிரதமரிடம் தெரிவித்துள்ளார்.

மாலைதீவில் உள்ள இலங்கையர்கள் தொடர்பில் உயர்ஸ்தானிகரிடம் பிரதமர் கேள்வி எழுப்பியிருந்த நிலையில், வெளிவிவகார அமைச்சின் தகவலுக்கமைய இலங்கைப் பணியாளர்கள் 20 ஆயிரம் பேர் வரை மாலைதீவில் பணியாற்றுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது மாலைதீவினை மீண்டும் திறப்பதற்கு அந்நாட்டு அரசாங்கம் மேற்கொண்டுள்ள தீர்மானத்திற்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர், அந்த நாட்டு சுற்றுலாத்துறை மீண்டும் வழமைக்குத் திரும்பும் என நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!