இஸ்லாமிய அடிப்படைவாதப் பிரச்சினைக்கு தீர்வு அவசியம் : ஞானசார தேரர்

இஸ்லாமிய அடிப்படைவாதப் பிரச்சினைக்கு முறையாகத் தீர்வு காணும் நோக்கில், கண்டியில் மாநாடு ஒன்றை ஏற்பாடு செய்துள்ளதாக, பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

இன்று, பொது பலசேனா அமைப்பினால், பொழும்பு கிருலப்பனையில் உள்ள அதன் தலைமை அலுவலகத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு குறிப்பிட்டார்.

நாட்டில் வியாபித்திருக்கும், இஸ்லாமிய அடிப்படைவாதப் பிரச்சினைக்கு முறையாகத் தீர்வு காணும் நோக்கில், நாட்டு மக்கள் அனைவரையும் ஒன்றிணைக்கும் வகையில், எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை கண்டியில் மாநாடு ஒன்றை ஏற்பாடு செய்திருக்கிறோம்.

இந்த மாநாட்டின் பின்னர், வெளிநாட்டு உளவுப் பிரிவொன்றினால் இலங்கையில் முன்னெடுக்கப்பட்ட சதித்திட்டம் தொடர்பில் அம்பலப்படுத்துவோம்.

வெளிநாட்டு உளவுப்பிரிவின் சதித்திட்டம் குறித்து நேற்றைய செய்தியாளர் சந்திப்பில் பகிரங்கப்படுத்தியுள்ளோம்.
பாதுகாப்புக் காரணிகளை கருத்திற்கொண்டு, எதிர்வரும் 7 ஆம் திகதி நடைபெறவுள்ள மாநாடு நிறைவடைந்ததும் அதனை வெளிப்படுத்துவோம்.  என குறிப்பிட்டுள்ளார். (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!