முல்லைத்தீவில், இரணைப்பாலை, மாத்தளன் போன்ற பிரதேசங்களில், நவீன முறையிலான மீன்பிடித் தொழிலுக்கு, நீரியல் வளத்திணைக்களம் அனுமதி மறுத்துள்ளமையினால், தமது வாழ்வாதாம் பாதிக்கப்பட்டுள்ளதாக, இரணைப்பாலை, மாத்தளன் மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், இந்த விடயம் தொடர்பில், இன்று மனித உரிமைகள் ஆணைக்குழுவின் வவுனியா அலுவலகத்தில் முறைப்பாடு ஒன்றையும் பதிவு செய்துள்ளனர்.
இதன் போது, இரணைப்பாலை கடற்தொழில் கிராம அபிவிருத்தி சங்க தலைவர் உட்பட மீனவர்கள், முறைப்பாட்டை பதிவு செய்துள்ளனர். (சி)